டெல்லி திமுக திறப்பு விழாவில் அசம்பாவிதம்: தமிழச்சி தங்கபாண்டியன் அதிர்ச்சி!

டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவின் போது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலையுயர்ந்த செல்போன் திருடு போய்விட்டது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழாவில் சோனியா காந்தி உள்பட பல முக்கிய அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலையுயர்ந்த செல்போன் திருடு போய்விட்டது

இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, காவல்துறையில் புகார் செய்ய இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்