இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!

booster-vaccine-2

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான இடங்களிலும் சென்னையில் மட்டும் 160 இடங்களிலும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டம் இணை நோய் உள்ளவர்கள், முன் களப்பணியாளர்கள் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு சுகாதார துறை அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது