shadow

அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

குறிப்பாக கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது