shadow

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? அதிகாரபூர்வ தகவல்

மார்ச் 15ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட்டை துணை முதல்வரும் தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மாநில பட்ஜெட்டுக்கான தேதி குறிப்பிடாமல் இருந்தது. இந்த நிலையில் வரும் 15ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply