இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் 60,000 பேர் பங்கேற்றுள்ளனர். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரதமர் மன்மோகன் இவ்விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவிக்க தமிழர்கள் கோரிக்கைவிடுத்து வரும் இந்த நிலையில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்தியா இந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply