shadow

vijay protestமுதல்வர் ஜெயலலிதா மற்றும் பாரத பிரதமர் மோடி அவர்களை பற்றி இழிவாக கட்டுரையும் கருத்துப்படமும் வெளியிட்ட இலங்கை அரசினை கண்டித்தும், சென்னையில் உள்ள இலங்கையின் துணை தூதரகத்தை மூடுவதற்கு கோரிக்கை விடுத்தும் இன்று திரையுலக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய் உள்பட தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு பந்தல் அமைத்து திரையுலகினர் இந்த ஆர்ப்பாட்டத்தை தற்போது நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர்கள் சிவகுமார், விஜய், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேஆர் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் உள்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்

vijay protest 1

Leave a Reply