தர்மதுரை’ படத்திற்காக சொந்தக்குரலில் டப்பிங் செய்யும் தமன்னா

தர்மதுரை’ படத்திற்காக சொந்தக்குரலில் டப்பிங் செய்யும் தமன்னா
Tamanna-Kanden-Kadhalai-38
நயன்தாரா, த்ரிஷா ஆகிய முன்னணி நடிகைகள் சொந்தக்குரலில் ஒருசில படங்களில் டப்பிங் செய்து வரும் நிலையில் நடிகை தமன்னாவும் சொந்தக்குரலில் ‘தர்மதுரை’ படத்திற்காக டப்பிங் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இயக்குனர் சீனுராமசாமியின் ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வரும் தமன்னாவுக்கு இந்த படத்தில் மதுரைப்பெண் வேடம் கிடைத்துள்ளது. இந்த படத்திற்காக தமன்னாவுக்கு விருது கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் சொந்தக்குரலில் டப்பிங் செய்யுமாறு இயக்குனர் சீனுராமசாமி கேட்டுக்கொண்டதாகவும் அதனையடுத்து அவர் தமிழ் கற்றுக்கொண்டு இன்றுமுதல் டப்பிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்.கே. சுரேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் மே மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.