அஜித் பட ரீமேக்கில் தமன்னா: பரபரப்பு தகவல்

அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வேதாளம்’ திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே

இந்த படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பதும் அஜித் தங்கையாக லட்சுமி மேனன் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் ’வேதாளம்’ படத்தில் நாயகியாக நடித்த சுருதிஹாசன் கேரக்டரில் தற்போது தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது