shadow

சிம்புவுடன் முதல்முதலாக ஜோடி சேரும் தமன்னா

tamannaதமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என கடந்த பத்து ஆண்டுகளாக பல வெற்றி படங்களில் நடித்துவரும் தமன்னா இதுவரை அஜித், விஜய், தனுஷ், உள்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது முதன்முதலாக சிம்புவுடன் ஜோடி சேரவுள்ளார். இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் நிலையில் ஏற்கனவே ஸ்ரேயா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தமன்னாவும் இணைந்துள்ளார். மேலும் ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது.

மைக்கேல் ராயப்பன் தனது குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் மற்றும் படத்தொகுப்பாளராக ரூபன் பணியாற்றி வருகின்றனர்.

Leave a Reply