மென்மையான கேரக்டர்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த தமன்னா முதன்முதலாக வில்லி கேரக்டரில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழில் ‘வீரம்’ படத்திற்கு பின்னர் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த தமன்னாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அடுத்தடுத்து லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா, ப்ரியா ஆனந்த் ஆகியோர்கள் கோலிவுட்டில் இடம்பிடித்து வருவதால் தமன்னாவை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனாலும் தெலுங்கு சினிமா அவருக்கு கைகொடுக்கிறது.

மகேஷ்பாபுவுடன் “அகடு” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் தமன்னா. இந்த படத்தில் இதுவரை அவர் ஏற்காத நெகட்டிவ் கேரக்டரில் அவர் நடிக்கவுள்ளார். மகேஷ்பாபு நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னாவுக்கும் நெகட்டிவ் கேரக்டர். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் தமன்னாவுக்கு என்கிறது படக்குழு. இதற்காக சண்டைப்பயிற்சியெல்லாம் செய்து வருகிறார்.

ரூ.45 கோடியில் தயாராகும் இந்த திரைப்படம் 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது.

Leave a Reply