shadow

கணவர்- மனைவி ஒன்றாக ஓட்டலில் சாப்பிடக்கூடாதா? தலிபான்கள் விளக்கம்

பெண்கள் ஹோட்டலில் சென்று சாப்பிட கூடாது என்றும் கணவருடன் கூட ஹோட்டலில் சென்று சாப்பிட கூடாது என்றும் ஆப்கான் நாட்டை ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது

ஆனால் இந்த தகவலை தாலிபான்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து செய்தி தாலிபான்கள் தொடர்பாளர் கூறும் போது பெண்கள் தங்கள் கணவருடன் ஹோட்டலில் சென்று சாப்பிட கூடாது என்று தாலிபான்கள் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை இல்லை என்றும் பெண்கள் ஓட்டலில் சென்று சாப்பிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்