தாஜ்மஹால் மூடப்படுகிறதா? சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

இந்தியாவின் முக்கிய சுற்றுலாதலமும், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் தற்காலிகமாக மூடப்படுவதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வரும் நிலையில், தற்காலிகமாக தாஜ்மகாலுக்குள் பார்வையாளர்கள் அனுமதியை ரத்து செய்து மூடிவிடும் படி அதிகாரிகள் உத்தரப்பிரதேச அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

ஏற்கனவே ஆக்ராவில் உள்ள ராதாஸ்வாமி கோவில் கால வரம்பின்றி மூடப்பட்டுள்ளது என்பதும், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அடுத்த அட்டாரி வாகா எல்லையில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று முதல் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் இருநாட்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்க்க கூடுவதால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது.

Leave a Reply