தாஜ்மஹால் இருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமானது: பாஜக பெண் எம்பி அதிர்ச்சி தகவல்

தாஜ்மஹால் இருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமானது: பாஜக பெண் எம்பி அதிர்ச்சி தகவல்

தற்போது தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கும் இடம் எங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தது என்று பாஜக பெண் எம்பி தியா குமாரி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜெய்ப்பூரை சேர்ந்த அரச குடும்பத்தில் வம்சாவழியாக தியா குமாரி தாஜ்மகால் இருக்கும் இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே தாஜ்மஹாலில் இந்து சிலைகள் இருப்பதாக கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் தற்போது தாஜ்மஹால் இருக்கும் இடமே எங்களுடையது என பாஜக பெண் எம்பி தியா குமாரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது