ரூபாய் நோட்டுக்களில் இனி காந்தி படம் இல்லையா?

தற்போது அனைத்து ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இருக்கும் நிலையில் இனி மற்ற தலைவர்களின் படங்களையும் ரூபாய் நோட்டுகளில் பதிவு செய்ய பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஒரு ரூபாய் நோட்டு முதல் 2000 ரூபாய் நோட்டு வரை தற்போது மகாத்மா காந்தியின் படம் மட்டுமே உள்ளது

இந்த நிலையில் இனி புதிதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் படம் பதிவு செய்வது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது