shadow

15aa

உலகக்கோப்பை 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது.

இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் 20 ஓவர்கள் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி இரண்டாவது ஓவரிலேயே ரஹானே விக்கெட்டை இழந்தது. மேலும் இலங்கை அணியின் அபார பந்துவீச்சு காரணமாக விராத் கோஹ்லியை தவிர மற்றவர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். விராத் கோஹ்லி மட்டும் நிலைத்து நின்று 77 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி சங்கரகராவின் அபார ஆட்டத்தினல் 17.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.

 

ஸ்கோர் விபரம்:

இந்தியா 130/4 20 ஓவர்கள்:

ரோஹித் சர்மா 29
ரஹானே 3
விராத் கோஹ்லி 77
யுவராஜ்சிங் 11
தோனி 4

உதிரிகள் 6

மொத்தம் 130
இலங்கை 132/4 17.5 ஓவர்கள்

பெராரே 5
தில்ஷன் 18
ஜெயவர்தனே 24
சங்கரகரா 52
திரமென்னே 7
பெரரே 23

உதிரிகள் 5

மொத்தம் 134

 

Leave a Reply