shadow

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்து, அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், டி.ராஜேந்தருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.