shadow

சுவிட்சர்லாந்து: மாதந்தோறு ஊதியம் கொடுக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
swiss.chennaitodaynews.com
சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்நாடு மாதம் $2500 டாலர் வழங்க முடிவு செய்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சுவிஸ் நாட்டில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தும்போது அதற்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது சட்டம். மக்களுக்கு மாதந்தோறும் பணம் கிடைப்பதால் இந்த திட்டம் சுவிஸ் மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் இந்த திட்டத்திற்கு எதிராகவே பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தனர். இந்த திட்டத்தை அறிமுகம் செய்தால், செய்கிற வேலைக்கும், பெறுகிற ஊதியத்துக்கும் தொடர்பு இல்லாமல் போய் விடும் என்பதால் சுவிஸ் மக்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை. மேலும் சுவிஸ் நாட்டில் ஏராளமான வெளிநாட்டினர்களும் குடியேறி அங்கு குடியுரிமையும் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் மாதந்தோறும் ஊதியம் ஏன் கொடுக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

Leave a Reply