ஸ்வீடன் நாட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும், ஆண்களுக்கு கொடுக்கும் சம்பளம் பெண்களுக்கு கொடுப்பதில்லை. வருடத்திற்கு ஆண்களை விட பெண்களுக்கு 250,000 யூரோ வரை குறைவாகவே சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது, இதனால் பெண் ஊழியர்கள் பலர் அதிருப்தியில் இருந்தனர்.
இதனால் Annelie Nordstrom என்ற பெண், மிக புத்திசாலித்தனமாக ஆண் போன்று மேக்கப் செய்து தான் பணிபுரியும் அலுவலகத்தில் தன்னை ஒரு ஆண் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆண்கள் பெறும் சம்பளத்தை இதுவரை பெற்று வந்துள்ளார். சமிபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, ஸ்வீடனிலும் இந்த நடைமுறையை பின்பற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
இதனால் இதுவரை அலுவலகத்தை ஏமாற்றிக்கொண்டிருந்த Annelie Nordstrom, தற்போது தன் நிஜ வடிவத்தை வெளிக்காட்டியுள்ளார். தான் எவ்வாறு மேக்கப் செய்து அலுவலக ஊழியர்களை இதுநாள் வரை ஏமாற்றினார் என்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளார். இருந்தும் அவரது அலுவலக மேலதிகாரிகள் அவர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.