shadow

இரண்டாவது நாளிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சு.சுவாமி. துணை சபாநாயகர் எச்சரிக்கை

subramanian swamyபாஜகவின் முக்கிய தலைவரும் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவருமான சுப்பிரமணியன் சுவாமி, சமீபத்தில் ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்று தற்போதைய பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். முதல் நாளில் ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தி நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சுவாமி, இரண்டாவது நாளில் சிறுபான்மையினர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் குறித்தும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் அவையே ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்பட்டதால் தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பும் சுவாமியை எச்சரிக்கை செய்வதாகவும், அவருடைய பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் தெரிவித்தார்.

சுவாமியின் பேச்சை கண்டித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் கூறியதாவது: சுவாமியின் சர்ச்சைக்குரிய பேச்சு, மாநிலங்களவைக்கு பாஜக அளித்துள்ள புதிய பரிசு. சுவாமி பதவியேற்றுக் கொண்ட இரு தினங்களில், அவரது பேச்சு இரு முறை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. ஆண்டுக்கு 365 நாள்கள் உள்ளன. இன்னும் எத்தனை முறை அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்போகிறீர்கள்? நாடாளுமன்ற பேச்சுக்கும், வீதிகளில் பேசும் மொழிக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறார்’ என்று கூறினார்.

Leave a Reply