shadow

sornakkaவிக்ரம், ஜோதிகா, ரீமா சென் நடிப்பில் இயக்குனர் தரணியின் மாபெரும் வெற்றிப்படம் தூள். இந்த படத்தில் வில்லி கேரக்டரான சொர்ணக்கா என்ற கேரக்டரில் நடித்திருந்த தெலுங்கானா சகுந்தலா, நேற்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

தெலுங்கில் சுமார் 70 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சகுந்தலா, தமிழில் தூள் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர். இவரது நடிப்பை பார்த்து விக்ரம், ஜோதிகா ஆகியோர் அவரை நேரில் புகழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடிகை சகுந்தலாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவருடைய உறவினர்கள் அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைக்கு பலனின்றி மரணம் அடைந்தார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நாளை நடைபெறும் என தெரிகிறது.

Leave a Reply