லட்சக்கணக்கான வெங்காயம் பாதிப்பு

கடந்த சில நாட்களாகவே வட இந்தியாவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர் என்பது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் தற்போது ஒரு மிகப் பெரிய வெட்டுக்கிளிகள் படை ஒன்று திரண்டு வந்து ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் மாவட்டத்தில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்களை சீரழித்துள்ளது

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும் போது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் உள்பட பல்வேறு விலை பொருட்களை இந்த வெட்டுக்கிளிகள் அழித்து விட்டதாகவும் இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

வெட்டுக்கிளிகள் தங்களுடைய நிலத்தை தாக்காதவாறு மருந்து தெளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளார் இது குறித்து ராஜஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது

Leave a Reply