shadow

பிரேசில் நாட்டின் முதல் பெண் அதிபர் சஸ்பெண்ட். புதிய அதிபரானார் துணை அதிபர்
brazil
பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் போலியான பொருளாதார புள்ளிவிபரங்களை வெளியிட்ட காரணத்திற்காக நேற்று தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து துணை அதிபர் மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனால் பிரேசில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் குறித்து பொலியான புள்ளிவிபரங்கள் வெளியிட்ட விவகாரம் குறித்து ப்ரேசில் நாட்டு நாடாளுமன்ற செனட் சபையில் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது சுமார் 22 மணி நேரம் விவாதம் நடைபெற்ற பின்னர் முடிவில் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 81 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 55 பேர் அதிபர் தில்மா ரூசெப்புக்கு எதிராக வாக்களித்தனர். 22 பேர் மட்டுமே ஆதரித்தனர்.

இதையடுத்து அதிபர் தில்மா ரூசெப் நேற்று தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போதைய துணை அதிபர் மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

தில்மா மீது சுமார் 6 மாதங்கள் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் அதுவரை மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பொறுப்பு வகிப்பார் என்றும் இந்த விசாரணையின் தீர்ப்பை பொறுத்தே அதிபர் பதவியில் தில்மா மீண்டும் தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ல் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக தில்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2015-ல் நடந்த அதிபர் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply