3 நாட்களே ஆன குழந்தையை டுவிட்டர் மூலம் காப்பாற்றிய சுஷ்மா ஸ்வராஜ்

3 நாட்களே ஆன குழந்தையை டுவிட்டர் மூலம் காப்பாற்றிய சுஷ்மா ஸ்வராஜ்

சமூக வலைத்தளங்கள் மூலம் பல உதவிகள் செய்து பெரிதும் புகழப்பட்டவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் உயிருக்காக போராடிய பிறந்து 3 நாட்களே ஒரு பச்சிளங்குழந்தையின் உயிரை அவர் டுவிட்டரில் வந்த ஒரு செய்தி மூலம் காப்பாற்றியுள்ளார்.

போபாலைச் சேர்ந்த தம்பதியருக்கு பிறந்தஆண் குழந்தை பிறந்த போதே தமனியில் கோளாறுடன் பிறந்தது. இதனல் அக்குழந்தை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உயர் சிகிச்சை அளிக்க டெல்லி செல்ல வேண்டும் என்ற நிலையில் இக்குழந்தையின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர்.

இந்நிலையில் குழந்தையின் நிலை குறித்து டுவிட்டரில் உறவினர் ஒரு பதிவு செய்தார். இந்த பதிவு உடனடியாக பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் சிவராஜ் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்பட பலருக்கு பகிரப்பட்டது.

இந்த பதிவை பார்த்த அடுத்த நிமிடம் குழந்தையின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்த சுஷ்மா, உடனடியாக விமானம் மூலம் குழந்தையுடன் டெல்லி செல்ல ஆவன செய்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமாகி வருகிறது.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறியபோது, “இப்படியொரு உடனடி உதவியை உண்மையில் எதிர்பார்க்கவில்லை என்றும், சுஷ்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் குழந்தையை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக டெல்லிக்கு விமானம் மூலமாக புறப்பட்டுச் சென்றதாகவும், தற்போது குழந்தை குணமாகி வருவதாகவும் கூறினார். மேலும், இது தொடர்பாக உரியவர்களுக்கு செய்தியை சென்று சேர்த்த அனைவருக்கும் முக்கியமாக சுஷ்மாவிற்கும், முக்கிய பங்காற்றிய மகராஷ்டிர முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றிகள் என்றும் தெரிவித்தார்.

3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் உயிரை காப்பாற்றிய சுஷ்மாவின் நடவடிக்கைக்கு டுவிட்டரில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறதுஜ்.

Leave a Reply

Your email address will not be published.