காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே தங்களது லட்சியம் என்று கருத்து கூறிவரும் நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவரும் உள்துறை அமைச்சருமாகிய சுஷில்குமார் ஷிண்டே, சரத்பவார் பிரதமராக வந்தால் மகிழ்ச்சியடைவேன் என நேற்று ஒரு பேட்டியில் கூறியிருந்ததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சரத்பவார் பிரதமரானால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறினார். இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுஷில்குமார் ஷிண்டெ, தன்னிடம் சரத்பவார் பிரதமரானா என்ன நினைப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த பதிலை கூறியதாகவும், உண்மையில் ராகுல்காந்தியை இந்த தேர்தலில் பிரதமர் ஆக்குவதுதான் தனது நோக்கம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் உண்மையில் ராகுல்காந்திக்கும் சுஷில்குமாருக்கும் கருத்துவேறுபாடுகள் உள்ளதாகவும் அதன் வெளிப்பாடே இந்த பேட்டி என்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply