shadow

முதல்முறையாக மூன்று முக்கிய வேடங்களில் சூர்யா

24கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் சூர்யா நடித்து தயாரித்த ‘பசங்க 2′ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவரது அடுத்த படமான ’24’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

வரும் கோடை விடுமுறையில் ’24’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் சூர்யா நடித்துள்ள மூன்று வித்தியாசமான கேரக்டர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

அண்ணன் மற்றும் தம்பி என்ற இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள சூர்யா மூன்றாவது அண்ணன் சூர்யாவின் மகனாக டீன் ஏஜ் கேரக்டரிலும் நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2D நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Leave a Reply