shadow

நடிகை சமந்தாவுக்கு மீண்டும் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது.

லிங்குசாமி டைரக்டு செய்ய, அவருடைய தம்பி சுபாஷ்சந்திரபோஸ் தயாரிக்கும் புதிய படத்தில், சூர்யா ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில், 10 நாட்கள் நடந்தது. சூர்யா–சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில், சமந்தாவுக்கு  தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவருடைய முகம் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றின.  உடம்பிலும் அதுபோல் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டன. இதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

சூர்யா, லிங்குசாமி, மற்றும் படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினார்கள். சமந்தா இல்லாத காட்சிகளை டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Leave a Reply