shadow

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடலை அனிருத் மற்றும் ஜீவி பிரகாஷ் ஆகியோர் பாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.