அசுரன் டீமுடன் இணையும் சூர்யா! அதிகாரபூர்வ அறிவிப்பு

சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தனுஷ் மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த இந்த படம் தமிழ் சினிமாவின் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு அவர்களும் அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அவர்களும் தற்போது சூர்யாவுடன் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஆம், சூர்யாவின் 40வது படத்தை தாணு தயாரிக்க இருப்பதாகவும் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

வெற்றிமாறன் தனது அடுத்த படத்தை சூரியை வைத்திருப்பதாகவும் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவரது அடுத்த படம் சூர்யா படம் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது

 

Leave a Reply