shadow

சூர்யா-அமலாபால் படத்தின் டைட்டில் ‘பசங்க 2’

pasangaசூர்யாவின் 2D நிறுவனம்த்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹைக்கூ. ‘பசங்க’ படத்திற்கு பின்னர் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டைட்டிலை பாண்டியராஜ் சமீபத்தில் மாற்ற முடிவு செய்தார். ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், இந்த படத்திற்கு தமிழகஅரசின் வரிவிலக்கைப் பெற ஆங்கில டைட்டில் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக பெயரை மாற்ற முடிவுசெய்த பாண்டியராஜ், தனக்கு ஒரு நல்ல டைட்டிலை பரிந்துரை செய்யுமாறு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தார்.

பாண்டியராஜின் வேண்டுகோளை அடுத்து ஏராளமானோர் பலவிதமான டைட்டில்களை பரிந்துரை செய்தனர். மலர்கள், மழலை, பூக்கள், குட்டிப்பசங்க, பசங்க 2′ போன்ற தலைப்புகளில் பாண்டியராஜ் ‘பசங்க 2’ என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார். நேற்று மாலை இந்த டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்த பாண்டியராஜ், படத்தின் பெயருடன் அமைந்த போஸ்டரையும் தனது டுவிட்டரில் ரிலீஸ்செய்தார்.

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘பிசாசு’ படத்திற்கு இசையமைத்த அரோல் கராலி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனர் மதன் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply