shadow

கோவையை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ 97 லட்சம் மோசடி செய்ததாக பிரபல நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் கைது செய்யப்பட்டார்

கோவையை சேர்ந்த தொழிலதிபர் கிரிதரன் என்பவரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக கேரள பாஜக எம்பி நடிகருமான சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபி மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சுனில்கோபி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஷங்கர் இயக்கிய ’ஐ’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த சுரேஷ் கோபியின் சகோதரர் தான் சுனில் கோபி என்பது குறிப்பிடத்தக்கது