கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி, மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயந்தி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் ஜெயந்தி மிகவும் காலதாமதமாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததாக கூறி அவரது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து விஜயகாந்த் வெற்றி பெற்றது உறுதியாகியுள்ளது.

இந்த தீர்ப்பை ஒட்டி தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply