shadow

சொத்துக்குவிப்பு வழக்கு. ஜெயலலிதாவின் புதிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

jayalalithaa_0_0_0_0_1_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் ஜெயலலிதாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது என்றும் அவருக்கு இந்த வழக்கில் அப்பீல் செய்ய உரிமையே இல்லை என்றும் அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவாராய் ஆகியோர் அமர்வின் முன் நடைபெறும் இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தவே, பி.வி.ஆச்சாரியா அவர்களின் ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் அவர்களும் வாதாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது என்றும் அன்பழகன் தரப்புக்கு அப்பீல் செய்யவே உரிமை இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். இதனால்
இன்று அன்பழகன் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தனது வாதத்தைத் தொடங்க உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply