shadow

transgender

இதுவரை ஆண் அல்லது பெண் என குறிப்பிட்டு வந்த திருநங்கைகள் இனி மூன்றாவது பாலினமாக திருநங்கை என்ற பாலினத்தையே குறிப்பிடலாம் என்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டு வகுப்பினர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கவேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் முலம் திருநங்கைகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இனி ஆண், மற்றும் பெண்களுக்கு இணையாக சலுகைகளை பெறுவர். ஆறு மாதங்களுக்கு இதுகுறித்த முறையான சட்டதிருத்தம் கொண்டுவ்ர வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி திருநங்கைகளுக்கு சுகாதார வசதியுடன் கூடிய சிறப்பு பொது கழிப்பறைகளை கட்டவும், அவர்களுடைய உடல்நலப் பிரச்னைகளை கவனிக்க சிறப்பு மருத்துவ துறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply