சபாநாயகர், ஓபிஎஸ், உள்பட 11 எம்.எல்..ஏக்களுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

சபாநாயகர், ஓபிஎஸ், உள்பட 11 எம்.எல்..ஏக்களுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கும், சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளர், ஆகியோர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு குறித்து சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது ‘அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்த விவகாரம் குறித்த்து சபாநாயகர், சட்டசபை செயலாளர் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்..ஏக்கள் ஆகியோர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply