shadow

கருணைக்கொலையை அனுமதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

கருணைக்கொலை குறித்த வழக்கின் ஒன்றின் தீர்ப்பில் மீள முடியாத நோயில் வாடுபவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

கருணைக்கொலை குறித்த வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, தன்மானத்துடன் இறப்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை, கருணைக் கொலை மற்றும் வாழும்போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும் நடைமுறை சட்டப்படி செல்லும்.

தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம். மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுக்க வேண்டும். கருணைக்கொலையை நோயாளியின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிர் பிரிய வைப்பதன் மூலம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது

Leave a Reply