ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடையா? நாளை விசாரணைக்கு வருகிறது அவசர மனு

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடையா? நாளை விசாரணைக்கு வருகிறது அவசர மனு
jallikattu
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தடை விதித்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு இவ்வருடம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தவிருந்த தடையை கடந்த 8ம் தேதி நீக்கியது. இதனால் பொதுமக்களும் காளையை வளர்த்து வருபவர்களும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் மத்திய அரசு தடை நீக்கியதை எதிர்த்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரியக் கழகம், விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பான ‘பீட்டா’ மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஆகிய அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்துள்ளன. மேலும் ஜல்லிகட்டு இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவிருப்பதால் இந்த மனுக்களை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு,  இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளைய விசாரணையில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Chennai Today News: Supreme court hear petition against Jallikattu tomorrow

Leave a Reply