போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவதா? உச்சநீதிமன்றம் கண்டனம்!\

போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவதா? உச்சநீதிமன்றம் கண்டனம்!\

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்காமல் வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள், தற்போது இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்த பின்னர் பொது மக்களையும் மாணவர்களையும் போராட்டத்திற்கு தூண்டி விடுவதாக ஆளும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி மற்றும் இந்தியாவின் பல இடங்களில் இந்த மசோதாவை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதனையடுத்து இது குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:

டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிருப்தி தெரிவித்துள்ளார். போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்த அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது என்றும், முதலில் அங்கு அமைதி நிலவட்டும் என்றும், யார் கலவரம் செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை நாங்கள் இப்போது சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply