மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளர் ஆகியோர்களின் விடுதலைக்கு ஏற்கனவே தடை விதித்திருந்த சுப்ரிம் கோர்ட் இன்று மேலும் நால்வரின் விடுதலைக்கும் தடை விதித்துள்ளது.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் ராஜிவ் கொலையாலைகள் 7 பேர்களையும் விடுதலை செய்யப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த மத்திய அரசு, முதலில் முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு தடை வாங்கியது. அதை அடுத்து மேலும் நால்வரின் விடுதலைக்கும் தடை கேட்டு சுப்ரிம் கோர்ட்டில் மனு செய்தது. அந்த மனுமீதான விசாரணை இன்று நடந்தது.

மத்திய அரசு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, சுப்ரீம்கோர்ட் ஆணை பிறப்பிக்கும் வரை ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி உள்பட 4 பேரை விடுவிக்கக் கூடாது என உத்தரவிட்டது. எனவே ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்களையும் விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply