shadow

டெல்லியில் டீசல் கார்களுக்கான தடை நீக்கம். சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

carடெல்லியில் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தடையை டெல்லி ஐகோர்ட் இன்று நீக்கியுள்ளது. புதிதாக விற்பனை செய்யப்படும் கார்கள் அதன் விற்பனை விலையில் ஒரு சதவீதத்தை சுற்றுச் சூழல் பாதுகாப்பு வரியாக செலுத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை இன்று டெல்லி சுப்ரீம்கோர்ட் வழங்கியது. இந்த தீர்ப்பில் டெல்லியில் 2,000 சிசி திறனுக்கு மேலான டீசல் கார்கள் விற்பனை மீதிருந்த தடையை நீக்குவதாகவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) ஒரு சதவீத வரியை வசூலிப்பதற்கு தனி கணக்கைத் தொடங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஒரு கார் விற்பனையானவுடன் அதற்கு ஒரு சதவீத சுற்றுச் சூழல் பாதுகாப்பு வரி செலுத்தப்பட்டதை உறுதி செய்த பின்னரே பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த தீர்ப்புக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Leave a Reply