shadow

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க சுப்ரீம் கோர்ட் தடை

கடந்த சில மாதங்களாக ஆதார் அட்டை எண்ணை வங்கி கணக்கு உள்பட பல்வேறு ஆவணங்களுடன் இணைக்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற வருமான வரித்துறை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது.

வருமான வரி செலுத்துவதற்கும், பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் அவசியம் என சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளீயிட்டிருந்தது. வருமான வரி செலுத்துவோர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதற்கான கடைசி தேதி ஜூன் 30 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஆதார் எண் கட்டாயம் என்பது ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாகும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் வழங்கிய உத்தரவு ஒன்றில், ‘பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. பான் கார்டுடன், ஆதார் எண் இணைக்காவிட்டாலும், பான் கார்டு செல்லும். பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கக்கூடாது. இது தொடர்பாக அரசியல் சாசன பெஞ்ச் முடிவு செய்யும் வரை இந்த தடை தொடரும்’ என கூறியுள்ளது.

Leave a Reply