shadow

விஜய்-அட்லி இணையும் படபூஜை. சூப்பர் ஸ்டார் மிஸ்ஸிங்

shadow

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள “விஜய் 59” படத்தின் பூஜை இன்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த தொடக்கவிழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், அட்லி, பிரபு, கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த தொடக்கவிழாவிறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை.

‘விஜய் 59’ படத்தில் விஜய் நீண்ட இடைவெளிக்கு பின்னர் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1 முதல் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply