shadow

விக்ரம் வேதா ஒரு மாஸ் படம்: சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

விஜய்சேதுபதி, மாதவன், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி காரணமாக படக்குழுவினர் உற்சாகத்துடன் இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக இந்த படத்தின் சிறப்புக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் ‘அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ள ஒரு மாஸ் படம்’ என்று ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ரஜினியின் பாராட்டிற்கு இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தங்களது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.

விஜய்சேதுபதி, மாதவன், மதயானை கூட்டம்’ கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத், ஜான் விஜய், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர். சி.எஸ்.சாம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வினோத் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு பணியும் புரிந்துள்ளனர். இந்த படத்தை டிரெடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

//twitter.com/PushkarGayatri/status/890256487217373184

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *