shadow

வெள்ள நிவாரண நிதி: ரஜினி ரூ.10 லட்சம் வழங்கினார்.

rajinikanthதமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக கோலிவுட் நட்சத்திரங்களான சிவகுமார் குடும்பம் ரூ.25 லட்சம், விஷால் ரூ.10 லட்சம், தனுஷ் ரூ.5 லட்சம், பிரபு ரூ.5 லட்சம் சத்யராஜ் ரூ.5 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.5 லட்சம் என வழங்கியுள்ள நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது பங்காக ரூ.10 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது ஷங்கருடன் அமெரிக்காவில் ‘எந்திரன் 2’ படத்தின் ஆலோசனையில் இருந்தாலும் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இந்த தொகை ஸ்ரீராகவேந்திரா டிரஸ்ட் மூலம் நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினியை தொடர்ந்து இன்னும் ஒருசிலர் நடிகர்களின் வெள்ள நிவாரண நிதிகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply