shadow

சன் டிவியில் விஜய், தனுஷ் படங்கள்

கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் திரைப்படங்களை கூட சாட்டிலைட் தொலைக்காட்சிகள் உரிமையை வாங்க தயங்கிய நிலையில் தற்போது இந்த வியாபாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ரஜினியின் ‘2.0’ முதல் பல படங்களின் சாட்டிலைட் வியாபாரங்கள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் தற்போது இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

இந்த இரண்டு படங்களும் வரும் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி தினங்களில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply