shadow

roja 1தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகை ரோஜா திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் YSR ஜெகன்மொகன் ரெட்டி கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் நகரி பகுதியை அடுத்து சத்திரவாடா என்ற இடத்தில் தேர்தல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். உடனடியாக கட்சி தொண்டர்கள் அவரை அருகிலுள்ள வீட்டிற்கு தூக்கி சென்று டாக்டருக்கு தகவல் கொடுத்தனர்.

உள்ளூர் டாக்டர் ஒருவர் ரோஜாவுக்கு இரண்டு பாட்டில்கள் குளூக்கோஸ் ஏற்றினார். பின்னர் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த நடிகை ரோஜா, கட்சியினர்களின் வேண்டுகோளையும் மீறி ஒய்வு எடுக்காமல் பிரச்சாரத்தை தொடர்ந்தார். அவர் வாக்காளர்களை மின்விசிறி சின்னத்தில் ஓட்டுகேட்டு தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார்.

Leave a Reply