shadow

சீன நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்ய போகிறார் சன்னிலியோன்

ஆபாச பட நடிகை, பாலிவுட் நடிகை, அழகு சாதன பொருட்கள் பிசினஸ் என வருமானத்தை பெருக்கி கொண்டே வரும் சன்னிலியோன் அடுத்ததாக சொந்தமாக மொபைல் நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளாராம்.

சீனாவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சன்னிலியோன் இந்த நிறுவனத்தை தொடங்கவுள்ளதாகவும், முதல் மாடல் கவர்ச்சிகரமான திட்டங்களுடன் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் சன்னிலியோன் தரப்பு கூறியுள்ளது.

மொபைல் மார்க்கெட்டில் உலக அளவில் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் போட்டி போட்டு வரும் நிலையில் சன்னிலியோனின் நிறுவனம் எந்த அளவுக்கு மொபைல் வாடிக்கையாளர்களை கவரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply