shadow

UPSC வினாத்தாளில் ஆபாச நடிகை கேள்வியா? அதிர்ச்சி தகவல்

sunny-leoneஇந்தியா முழுவதும் நடைபெறும் தேர்வுத்தாள்களில் அவ்வப்போது நடிகைகள் குறித்த கேள்விகள் இடம்பெற்று சர்ச்சைக்குள்ளாகி வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில் சமீபத்தில் நடந்த UPSC தேர்வின் கேள்வித்தாளில் ஆபாச நடிகை சன்னிலியோன் இடம்பெற்றிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

UPSC தேர்வு கேள்வித்தாளில் ஒரு பிரபலமான புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அந்த புத்தகத்தை எழுதி எழுத்தாளர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதன் பதிலாக நான்கு நபர்களின் பெயரை கொடுத்து அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த நான்கு பதில்களில் சன்னிலியோன் பெயரும் இடம்பெற்றிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய கேள்வி ஒன்றின் பதிலில் சன்னிலியோன் பெயர் இருந்ததை பார்த்து தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுபோன்ற நிலையை UPSC தேர்வாளர்கள் தவிர்த்திருக்கலாம் என்றும் பலர் கருத்து கூறியுள்ளனர்.

Leave a Reply