shadow

சன்னிலியோன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் டைட்டில் இதுதான்

பாலிவுட் கவர்ச்சிக்கன்னி சன்னிலியோன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்னிலியோன் நடிக்கும் சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ‘தவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த டைட்டில் முழுமையானது இல்லை என்றும், ‘தவி’க்கு முன்னாள் இன்னும் சில எழுத்துக்கள் அல்லது வார்த்தைகள் இருப்பதாகவும், அவை இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  இந்த படம் தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியிலும் தயாராகவுள்ளது.

வடிவுடையான் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இந்த படத்திற்காக சன்னிலியோன் குதிரைப்பயிற்சி, வாட்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply