shadow

சன்னிலியோனின் வம்சத்தையே காப்பாற்றிய விமான பைலட்

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கோடை விடுமுறை சுற்றுப்பயணமாக வெளிநாடுகளுக்கு தனது நண்பர்கள் மற்றும் கணவருடன் சமீபத்தில் சென்றார். விடுமுறையை முடித்துவிட்டு நேற்று தனியார் விமானம் ஒன்றில் மும்பையை நோக்கி திரும்பி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மோசமான வானிலை காரணமாக விமானம் நிலை குலைந்தது. விமானம் விபத்தில் சிக்கிவிடுமோ என்று அனைவரும் அஞ்சிய நிலையில், அனுபவம் வாய்ந்த விமானி, தனது திறமையால் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறிய சன்னிலியோன், ‘ நாங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார். அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். ஆனால் அதே நேரத்தில் எங்களை போல விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே நடுங்குகிறது’ என்று கூறினார்.

இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தால் சன்னிலியோன் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் மரணம் அடைந்திருப்பார்கள். எனவே சன்னிலியோனின் வம்சத்தையே காப்பாற்றிய விமானிக்கு நன்றி என்று சன்னிலியோன் ரசிகர்கள் டுவிட்டரில் நன்றி கூறி வருகின்றனர்.

Leave a Reply