கடந்த 17ஆம் தேதி மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் பிணமாக இருந்தார். அவர் அளவுக்கு அதிகமாக மனத்தளர்ச்சி மாத்திரை உட்கொண்டதால் மரணம் அடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறினாலும், அவர் தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டிருப்பார் என சந்தேகம் உண்டாகியுள்ளது.

இந்நிலையில் சுனந்தாவின் மகன் ஷிவ் மேனன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் “எனது அம்மா மிகுந்த மனவலிமை உள்ளவர். அவர் தற்கொலை செய்வதற்கு சிறிது கூட வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் சசிதரூர் எனது அம்மாவின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். அவர் எனது அம்மாவின் மரணத்திற்கு காரணம் என்பதை நான் சிறிதும் நம்பவில்லை. ஊடகங்கள் எனது அம்மாவின் மரணத்தை மிகைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

எனது அம்மாவுக்கு சசிதரூருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தனர். எனவே ஊடகங்களல் ஏற்பட்ட நெருக்குதல், தவறான மருந்துகளை உட்கொண்டது, அதிகப்படியான மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனை இன்றி அவர் எடுத்துக்கொண்டதே எனது அம்மாவின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்பது எனது கருத்து” இவ்வாறு சுனந்தாவின் மகன் கூறினார்.

Leave a Reply